30.03.2024 அன்று, “தமிழோடு நாம்” சார்பில், மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் நடத்தப்பட்ட “தொழில்முறை மேம்பாடு” குறித்த ஒரு நாள் பயிலரங்கில், மன மேலாண்மை, உணர்ச்சிகளின் பிணைப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் ஆசிரியரின் நெறிமுறைகள் குறித்து நிபுணர்கள் கலந்துரையாடினர். இதில் தமிழோடு நாம் நிறுவனர் முனைவர் திருமதி. த. லாவண்யசோபனா, பள்ளியின் தாளாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பயிலரங்கில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.