செய்தி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழோடு நாம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகள்

February 15th, 2024

நிகழ்வுகள்

தமிழோடு நாம் அமைப்பின் செயல்பாடாக 2024 ஆண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 15), தமிழ்நாடு உள்வட்ட பாதுகாப்பு பிரிவு காவல்துறை ஆளினர்களுக்கும், காவல்துறையினரின் குடும்பத்தார்க்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும், திருக்குறள் புத்தகமும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. காவல் துறையினரின் துணைவியர், குழந்தைகள் என நாற்பதுக்கும் மேற்பட்டோர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

பங்கேற்றவர்கள்

  • போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பிப்ரவரி 3, 2024 அன்று பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காவல் கண்காணிப்பாளர்கள் திரு. S. சக்திவேல் (உள்வட்ட பாதுகாப்பு பிரிவு), திரு. K. ராஜேந்திரன் (பாதுகாப்பு பிரிவு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • முனைவர். இரா. திருநாவுக்கரசு இ.கா.ப அவர்கள் தலைமையேற்று விழா பேருரையாற்றினார்.

போட்டிகளின் விபரம்

01 – ஓவியப் போட்டி

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு 
துப்பாய தூவும் மழை. 

02 – கவிதைப் போட்டி

வள்ளுவர் காட்டும் உடைமைகள் 

03 – திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

புகைப்படங்கள்